Skip to main content

கோவா காங்கிரஸ் செயல் தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ நியமனம்!

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

Alexo Reginaldo appointed Goa Congress executive chairman

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (17/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ லூரென்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக ஜேம்ஸ் ஆண்ட்ரேட் நியமிக்கப்பட்டுள்ளார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அடுத்தாண்டு கோவா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வியூகத்தை  முன்னெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இளைஞர்கள் சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள்'- கார்த்தி சிதம்பரம் பேச்சால் பரபரப்பு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Youngsters are going to Seeman, Vijay party' - Karthi Chidambaram's speech stirs up excitement

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாஜி திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் தொகுதி ஜோதிமணி எம்.பி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில்,  சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது.

அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளால் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதனால், நம் கட்சியில் பலம் இல்லை என்று கூறவில்லை. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்பினார்கள். அதனால்  காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. தற்போது 3-வது இடத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம். அதே நேரத்தில்  நம் கட்சியை சில கட்சிகள் தொட்டுவிடும் நிலையில் உள்ளது. கட்சியில் எம்.பிகளை  மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்துவிட முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏகள் அதிக அளவில் இருந்தால் தான் கட்சி வளரும். வளர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சி (திமுக) தற்போது ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேர்தலில் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகள் நம்மை கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் சங்கடப்படுகிறார்கள். ஆனால், திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை, பிரச்சனைகளை பற்றி அறிந்து அவர்களுக்காக பேசி தங்கள் கட்சியின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

அதேபோல, நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். மக்களிடம் மக்கள் மனதில் நாம் இடம்பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தட்டு மக்களின் மக்கள் பிரச்சினைகள், உரிமைகளுக்காக பேச வேண்டும். இளைஞர்கள் நம் கட்சியைவிட  சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். மக்களின் கவனத்தை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இன்று பல கட்சிகள் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கான மாற்றம் வேண்டும்'' என்று பேசினார். இந்தப் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Next Story

70 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காத விடை; தொடர் விசாரணையில் சிபிசிஐடி

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
No response after more than 70 days; CBCID in further investigation

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு பல நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெயக்குமாரின் மனைவி, மகன்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 70 நாட்களாகியும் தற்போது வரை சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் இரவு 9 மணி வரை குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.