Skip to main content

அகிலேஷ் யாதவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

Actor Rajinikanth meets Akhilesh Yadav

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

 

இதையடுத்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில், அங்குள்ள ராஜ்பவனுக்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிசுப்பொருட்களை யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்.

 

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தித்தேன். அப்போதிலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். அதிலிருந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வருகிறோம். 5 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை, இப்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்” என தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.எம்.டி.பியின் டாப் 10 இந்தியப் படங்கள் - இடம்பெற்ற 2 தமிழ்ப் படங்கள்

 

IMDb Top 10 Most Popular Indian Movies of 2023

 

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டாப் 10 மிகவும் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளது. முழு பட்டியல் விவரம் பின்வருமாறு...

 

1. ஜவான் (இந்தி)

2. பதான் (இந்தி)

3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (இந்தி)

4. லியோ (தமிழ்)

5. ஓஎம்ஜி 2 (இந்தி)

6. ஜெயிலர் (தமிழ்)

7. கதார் 2 (இந்தி)

8. தி கேரளா ஸ்டோரி (இந்தி) 

9. து ஜோதி மெயின் மக்கார் (இந்தி)

10. போலா (இந்தி)
 

 

 

Next Story

ரஜினியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

 

sivakarthikeyan in rajini 171

 

ரஜினிகந்த தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.