Skip to main content

'ஒரிஜினலாவே நான் வில்லன் மா'- ரஜினியின் 'தர்பார்' டிரெய்லர் வெளியீடு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார் படத்தின்' டிரெய்லர் மும்பையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. 
 

actor rajini kanth darbar trailer launch at mumbai

இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 'ஒரிஜினலாவே நான் வில்லன் மா' என்று ரஜினி பேசும் வசனம் தர்பார் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்

Next Story

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரஜினி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
rajini in Thiruporur registrar's office.

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளதாக அறிவித்திருந்தார். இதனிடையே நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. 

இந்த நிலையில், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினி சென்றுள்ளார். சென்னையை அடுத்த நாவலூரில் அவர் புதிதாக இடம் வாங்கியுள்ளதாகவும், அதைப் பதிவு செய்ய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரைக் காண அங்கு ரசிகர்கள் குவிந்துவிட்டனர். மேலும் புகைப்படங்கள் எடுக்க முற்பட்டனர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு காரில் ஏறிச் சென்றார். 

Next Story

“43 ஆண்டுகள்...” - பெற்றோர் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
soundarya rajinikanth about his parents

சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.

இதையடுத்து மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. பின்பு ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் 43வது திருமண நாள் கொண்டாடியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “43 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா மாற்றிக் கொண்ட செயின் மற்றும் மோதிரங்களை ஒவ்வொரு ஆண்டும் அப்பாவை அன்புடன் அணியச் செய்கிறார். உங்கள் இருவரை மிகவும் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ரஜினிகாந்த் - லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.