Skip to main content

90 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

90 crore fake currency notes seized!

 

குஜராத்தில் மாநிலத்தில் 90 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

ஆம்புலன்ஸ் மூலம் போலி ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக, குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூரத் மாவட்டத்திற்கு உட்பட்ட காம்ரேஜ் காவல்துறையினர், தீவிர வாகன தணிக்கையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்த காவல்துறையினர், அதில் 'REVERSE BANK OF INDIA' என அச்சிடப்பட்ட 25 கோடி ரூபாய் போலி நோட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

 

போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் ஒட்டுமொத்தமாக 90 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் கள்ளநோட்டு கட்ட வந்த இருவர்; காவல்துறையினர் விசாரணை

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

 Police interrogated 2 people who came to collect fake notes in the bank

 

சிதம்பரம் அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் உள்ளது. இதில் கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சுதாகர் ( 51) பண்ருட்டி ரெட்டிபாளையம் ஜெயராமன் மகன் செல்வகுமார் (38) இருவரும் டீசல் பங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக டீசல் பங்கில் வசூலான பணத்தை செல்வகுமார் சுதாகரிடம் கொடுத்துவிட்டு வங்கி கணக்கில் கட்டுமாறு சென்று விட்டார். தொடர்ந்து வங்கிகள் விடுமுறை என்பதால் சுதாகர் பணத்தை வீட்டில் வைத்திருந்து திங்கள் காலை  சிதம்பரம் மேலவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வங்கி கணக்கில் ரூ 6 லட்சத்து 4,500 கட்டியுள்ளார். பணத்தை வாங்கிய மேலாளர் வீரபத்திரன் அதில் கள்ள நோட்டு இருப்பதைக் கண்டறிந்து இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன் பெயரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்த போது அதில் ரூ 52 ஆயிரம் நகல் எடுக்கப்பட்ட கள்ள நோட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

சிவகாசியில் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது எப்படி?

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Counterfeit gang arrested in Sivakasi

 

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சவர்ணம் என்பவரின் பழக்கடையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சுப்புத்தாய் என்பவர் 500 ரூபாய் கொடுத்து பழங்கள் வாங்கியுள்ளார். அப்போது பஞ்சவர்ணத்திடம் பழங்களுக்காக தந்த 500 ரூபாய் நோட்டு மீது அவருக்கு சந்தேகம் எழ, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த 500 ரூபாய் நோட்டு போலி எனத் தெரியவர, சுப்புத்தாயிடமிருந்து ஆறு 500 ரூபாய் தாள்களைக் கைப்பற்றினர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சுப்புத்தாயிடம் விசாரணையைத் தொடர, தன்னுடைய மகள் துரைசெல்வியிடம் 500 ரூபாய் தாள்களை வாங்கியதாகக்  கூறியிருக்கிறார். 

 

இதையடுத்து, துரைசெல்வியிடம் இருந்து 59 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில், தனது தங்கையின் கணவர் பாலமுருகனை துரைசெல்வி கைகாட்டியிருக்கிறார். பாலமுருகனிடமிருந்து 50 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட, அவர் சிவகாசியைச் சேர்ந்த அருணைக் கைகாட்டியிருக்கிறார். அருண் அளித்த தகவலைத் தொடர்ந்து, சிவகாசியைச் சேர்ந்த நவீன்குமாரிடம் இருந்து 557 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. 

 

மேலும், கள்ள நோட்டு தயாரிக்க  பயன்படுத்திய மை, மடிக்கணினி, ஸ்கேனர், இரண்டு கலர் பிரிண்டர்கள், லேமினேஷன் மெஷின், ப்ரிண்டிங் பேப்பர் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுப்புத்தாய், துரைசெல்வி மற்றும் பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிற குற்றவாளிகளை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தவேண்டிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.