Skip to main content

9 வந்தே பாரத் ரயில் சேவைகள் நாளை தொடக்கம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 9 Vande Bharat train services start tomorrow

 

9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

 

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி திருநெல்வேலி - சென்னை, உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - பூரி, ராஞ்சி - ஹவுரா என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” - பிரதமர் மோடி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pm modi  praised the Supreme Court's verdict that Article 370 will be repealed

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்தாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதில் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், “சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது; இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு. நீதிமன்றம், அதன் ஆழ்ந்த ஞானத்தில், இந்தியர்களாகிய நாம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாகவும், போற்றவும் வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு ஒரு போதும் மாறாது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

உதகை மலை ரயில் சேவை ரத்து!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Uthagai Hill train service canceled

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மழை காரணமாக  ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை ரயில் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.