Published on 26/04/2020 | Edited on 26/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 824- லிருந்து 826 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனவில் இருந்து 5,914 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 26,496- லிருந்து 26,917 ஆக உயர்ந்துள்ளது.