70,000 crore rupees approval for purchase of military tracks-Ministry of Defense decision

70,000 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்தளவாடங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisment

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் இன்று பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பல்வேறு பரிசீலனைகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தில் மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாயில் ராணுவத்தளவாடங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படைக்காக எச்ஏஎல் நிறுவனத்திடம் 32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 யுட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு கப்பற்படைக்கு வழங்கப்படும். அதேபோல் சூப்பர்சோனி ஏவுகணைகள்,கடற்படைக்கு நெடுந்தூரம் தாக்கக்கூடிய ப்ரமோகிஸ் ஏவுகணைகள், ராணுவத்திற்கு 307 நவீன ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு 9 துருவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment