இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வரும் 7ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்குமட்டுமே (ரசிகர்கள்) அனுமதிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.