Skip to main content

40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

40 Rescue of a child who fell into a borehole

 

40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த மூன்று வயது குழந்தை போராடி மீட்கப்பட்ட சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

 

பீகார் மாநிலம் நாளந்தாவில் மூன்று வயது குழந்தை வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்த நிலையில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து.  உடனடியாக மீட்பு துறையினருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மீட்புப் படையினர் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர். தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்த பாலம்; பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
The bridge collapsed before the opening ceremony in bihar

பீகார் மாநிலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இம்மாநிலம், அராரியா மாவட்டத்தில் பத்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மேம்பாலp பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலம் நேற்று (18-06-24) திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த விசாரணையில், தரமற்ற கட்டுமானத்தால் இந்த மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.