ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 4 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கும் சம்பவம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை விழுந்த சம்பவம் மதியம் தெரியவந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்புத்துறை வீரர்களும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bvj.jpg)
இதுகுறித்து பேசிய அம்மாநிலத்திற்குட்பட்ட சுரோஹி மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தைக்கு உடனடியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து குழந்தை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)