3 fighter planes crashed in succession

Advertisment

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மூன்று போர் விமானங்கள் விழுந்து நொறுங்கிவிபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள விமானப்படைக்குச் சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் மெரினா பகுதியில் மிராஜ் 2000 என்ற போர் விமானமும், சுகோய் 30 என்ற விமானமும் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அடுத்தது மூன்று போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தின்மொரினாபகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரு விமானி உயிரிழந்துள்ளார். காயத்துடன் மீட்கப்பட்ட இரண்டு வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் விமானங்கள் விழுந்த இடத்தில் தொடர்ந்துமீட்புப்பணிகள் நடைபெற்றுவருவதாகபாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.