மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நேற்று (26.01.2021) நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. மேலும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக்கொடிஏற்றப்பட்டது.
விவசாயிகளின் பேரணியில்ஏற்பட்ட வன்முறையில், 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாக கூறியுள்ள டெல்லி காவல்துறை, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.டெல்லிவன்முறையில் தொடர்புடைய 200 பேரைதடுத்து வைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும்டெல்லிகாவல்துறைஅறிவித்துள்ளது.
இந்தநிலையில் டெல்லிகாவல்துறை, இன்று (27.01.2021) மலை 4 மணிக்குசெய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், அதில்நேற்று விவசாயிகளின் பேரணியில்நடந்த வன்முறை தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார்.