Skip to main content

பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

one day cm

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான பெண் பணியாற்றவுள்ளார். 

 

இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் நாளை (24.01.2021) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்ரகாண்டைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றவுள்ளார்.

 

இதுகுறித்து ஸ்ருஷ்டி கோஸ்வாமி, "இது உண்மையா என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், மக்கள் நலனுக்காக உழைக்கும்போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என கூறியுள்ளார்.

 

ஒருநாள் முதல்வராக அவர் பணியாற்றும்போது அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் ஆய்வு செய்யவுள்ளார். ஸ்ருஷ்டி கோஸ்வாமி ஏற்கனவே குழந்தைகள் மாநில சட்டமன்றத்தின் முதல்வராக இருந்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்