Skip to main content

டெல்லியில் பரிசோதனை முறையில் தளர்த்தப்படும் 144 தடை உத்தரவு...

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் அடங்கி அமைதி திரும்பிவரும் நிலையில், பரிசோதனை அடிப்படையில் இன்று காலை முதல் 4 மணிநேரம் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

 

144 revised in delhi

 

 

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. கண்ணீர்புகைக் குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் கடைகள், வீடுகள் மற்றும் பொதுச்சொத்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கலவரத்தில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக வன்முறை சம்பவங்கள் ஏதுமில்லாமல் அமைதி திரும்பியுள்ளதால் இன்று காலை முதல் 4 மணிநேரம் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என டெல்லி காவல்துறை இணை ஆணையர் அலோக் வர்மா தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.