144 injunctions in Sabarimala

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குசெல்லலாம் என தீர்ப்பளித்திருந்தது இந்த தீர்ப்பினை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவ அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வந்தனர்.

அந்த நிலையில் கடந்த முறை ஆறு நாட்கள் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்பொழுது கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கு நடந்த கலவரத்தில் 3 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பான நிகழ்வுகள் நடந்து முடிந்த நிலையில்தற்போது நாளை சித்திரை ஆட்டம் எனும்திருவிழாவிற்காக நாளை ஐயப்பன் கோயில் நடை மாலை திறக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையலாம் என்று ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருக்கலாம் என ஐயப்பன் சன்னதி, நிலக்கல், பந்தல், பம்பை ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.