narendra modi

Advertisment

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனாபரவலால், நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில், நாடு முழுவதுமுள்ள மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறைச் செயலாளர்களோடுஆலோசனை நடத்தியது.

இந்தநிலையில்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று (01.06.2021) முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆலோசனையின்போது, மத்திய அரசுமாநிலங்களுடன் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டவை குறித்தும், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்த சாத்தியமான வாய்ப்புகள் குறித்தும்பிரதமருக்கு விவரிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.