Skip to main content

இஸ்லாமிய இளைஞர் கொலை; 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

10 people sentenced to 10 years rigorous imprisonment in the case of Muslim youth

 

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி அன்று தப்ரஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் இரு சக்கர வாகனத்தைத் திருட முற்பட்டார். அப்போது அந்த ஊர் மக்கள் சிலர் தப்ரஸ் அன்சாரியை கையும் களவுமாகப் பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும் அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ எனவும் ‘ஜெய் அனுமான்’ எனவும் கூறச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள். தப்ரஸ் அன்சாரியைக் கட்டி வைத்து அடித்த வீடியோ அன்று சமூக வலைத்தளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் தப்ரஸ் அன்சாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில், அடுத்த 5 நாளில் தப்ரஸ் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி அவையை முடக்கினர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தப்ரஸ் அன்சாரியை அடித்த 13 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு ஜார்க்கண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் நீதிபதி அமித் ஷேகர் தண்டனையின் விவரங்களை அறிவித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேர்களில் ஒருவர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பலியாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து 2 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் தலா 15,000 ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; அதிமுக வழக்கு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; AIADMK case

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

counterfeiting liquor; AIADMK case

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல்கள் தகனம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

Next Story

ஹிஜாப்புக்கு பதில் துப்பட்டா அணியச் சொன்ன கல்லூரி; ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 Action taken by the teacher for College asked to wear dupatta instead of hijab

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையைத் திரும்ப பெற, கடந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். கர்நாடகா சம்பவத்தைப் போல் மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த சஞ்சிதா காதர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சஞ்சிதா காதர் ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்துள்ளார். இதனைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவரிடம் ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆசிரியை சஞ்சிதா காதர், தனது பணியை ராஜினாமா செய்து கல்லூரியை விட்டு வெளியேறினார்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து, ஹிஜாப் அணிவதற்குப் பதிலாகத் துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள அனுமதிப்பதாகக் கல்லூரி நிர்வாகம், சஞ்சிதாவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவைக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக  சஞ்சிதா காதர் கூறியிருந்தார்.  

இந்த நிலையில், நேற்று (13-06-24) கல்லூரி நிர்வாகத்துக்கு சஞ்சிதா மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘உங்கள் உத்தரவைக் கவனமாக பரிசீலித்த பிறகு, உங்கள் நிறுவனத்தில் மீண்டும் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். புதிய வாய்ப்புகளை ஆராயவும் முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு இதுவே சிறந்த வழி என்று நான் நம்புகிறேன். மீண்டும் அதே கல்லூரியில் பணியாற்றுவதற்கு எனக்கு வசதியாக இருக்காது ’ என்று தெரிவித்தார்.