10 lakh people download hall tickets - Information by Union Minister

கரோனா காலத்தில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளைநடத்தக் கூடாது எனஉச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான்,சதீஷ்கர்,புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட7 மாநிலங்கள் முடிவுசெய்துள்ளது.சோனியாவுடனானஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.அதேபோல்நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஜெ.இ.இ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், அதேபோல் 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து இருப்பதாக தேசிய தேர்வு தகவல்முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 15.19 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கைமூலம் மாணவர்கள் தேர்வெழுத விரும்புகின்றனர் என்பது தெரிகிறது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

Advertisment