/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ayyakannu_1.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்தார் அய்யாக்கண்ணு. மெரினாவில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த அய்யாக்கண்ணுவிற்கு தனி நீதிபதி ராஜா அனுமதி அளித்து இருந்தார். மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அனுமதித்து பிற்பகலில் வெளியான உத்தரவுக்கு அடுத்த சில மணி நேரங்களில் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மாற்ற இடத்தை தேர்ந்தெடுக்க அய்யாக்கண்ணுவுக்கு அறிவுறுத்தினர். மாற்று இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினால் பரிசீலிக்க உத்தரவிட்டார்கள் அரசு மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர். மாற்று இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதமிருக்க அனுமதி கோரினால் காவல்துறை பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையின் போது , போராட்டத்திற்கு அரசு அனுமதி மறுக்கவில்லை. இடத்தைத்தான் தீர்மானிக்கிறோம். போராட்டம் நடத்தும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் காவல் ஆணையருக்கு மட்டுமே உள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் மெரினா கடற்கரை பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் இடம் பெரினா. ஒருவரை அனுமதித்தால் ஒவ்வொருவராக வருவர்.
2017ல் அனுமதியின்றி கூடிய சிலரால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கூட்டமாக மாறியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு வள்ளுவர் கோட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுக்கலாம். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்றுதான் மனுதாரர் கூறியுள்ளார் என்று அரசு தரப்பு வாதிட்டது.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மெரினாவில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. 2003ல் பேனர்கள் கிழிக்கப்பட்ட பிரச்சனைக்கு பிறகுதான் மெரினாவில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அய்யாக்கண்ணு தரப்பு வாதிட்டது.
மெரினாவில் போராட்டம் நடத்த 2003ல் இருந்து யாரையும் அனுமதிப்பதில்லை என்று அரசு தரப்பு வாதிட்டது. முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் சேப்பாக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்தனர் என்றும் உண்ணாவிரதத்திற்கு அனுமதித்தால் நாளை 25 அமைப்புகள் போராட்டம் நடத்த காத்திருக்கிறது என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
தனி நீதிபதி உத்தரவு தவறான முன் உதாரணமாகிவிடும் என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார்.
இதையடுத்து, சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி மக்கள் அதிகம் கூடினால் என்ன செய்வீர்கள்? போராட்டம் நடத்த கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை அனுமதிக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)