Hardik-Patel-

இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் மாநிலத்தில் பட்டேல் வகுப்பைசேர்ந்தவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தை பட்டேல் குழுவின் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். ஹர்திக் பட்டேல் நடத்திய போராட்டங்கள் இந்திய அளவில் பேசப்பட்டது. இதனால் அவர் இளம் வயதிலேயே அரசியல் தலைவராக உருவானார். கடந்த 2019ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Advertisment

இந்த நிலையில் அவர், காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக அவர்நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் விடுத்துள்ள செய்தியில், ஹர்திக் பட்டேலை செயல் தலைவராக்க கோரி, தலைவர் சோனியா காந்திக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதாகவும், அதை அவர் ஏற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.