tn congress

Advertisment

2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளைவிட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக கணக்குகள் போட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலையொட்டி பணிகளை செய்து வந்தாலும், அக்கட்சிக்குள் விறு விறுப்பான வியூகங்கள் வகுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் நேரத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியே நீடித்தால் சரிப்பட்டு வராது என்று பெரும்பாலான காங்கிரஸார் நினைக்கிறாங்களாம். அவரை மாற்றிவிட்டு புதிய தலைவரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கலாம் என்று, தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்துக் கொண்டு சோனியாவிடம் வலியுறுத்தி வருகிறாராம் ப.சிதம்பரம்.

இது குறித்து அக்கட்சியின் சீனியர்களிடம் கேட்டபோது, ப.சி.யின் சிபாரிசை சோனியா காந்தி ஏற்கும் பட்சத்தில், அவர் ப.சிதம்பரத்தையே அந்தப் பொறுப்பை ஏற்கச் சொல்வார். அதை சிதம்பரம் ஏற்காவிட்டால், அழகிரியை மாற்ற வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.