Skip to main content

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

tiruppur district medical college cm palanisamy


திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 


திருப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் ரூபாய் 336.96 கோடி மதிப்பில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. 150 மருத்துவ மாணவர் சேர்க்கையுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவியாக  ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி  வழங்கினார். இந்த நிகழ்வின்போது தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடனிருந்தார். 



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஜிஎஸ்டி குறித்து கேள்வி; இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Question about GST; BJP issue on young girl

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பற்றி இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பாஜகவினர் இளம் பெண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சங்கீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆடத் துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை - திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Question about GST; BJP issue on young girl

முன்னதாக கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28ஆவது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.