திருப்பூரில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசிய அவர், தற்போதுள்ள சூழலில் நாடு எங்கே போகிறது என்று அனைவரும் சிந்திக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் வாழ்க்கையை அறிந்தவன் நான். அவர் தமிழகத்திற்கு தந்த 9 ஆண்டுகள் ஆட்சியை நேரில் பார்த்தவன்.

tamilaruvi manian

Advertisment

அப்படிப்பட்ட நான் ரஜினியை ஆதரிப்பதும், இயன்றவரை அவரை முதல்வராக்க எனது அறிவை, ஆற்றலை பயன்படுத்துவது எதற்காக என்று அனைவரும் யோசிக்க வேண்டும்.

Advertisment

ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும். பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும். அதற்கு ரஜினி முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை.

ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மீக அரசியலே அவரது திட்டம். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என தி.மு.க.வினர் கவலைப்படுகின்றனர்.

திராவிட கட்சிகளில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய இரண்டுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. மு.க. ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார். ஏன் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போது மத்தியில் ஆட்சி செய்த போது கோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழ் வர வேண்டும் என்றோ, இலங்கை தமிழருக்கு குடியுரிமை வர வேண்டும் என்றோ போராடி இருக்கலாமே.

திராவிட கட்சிகள் ஆளாமல் இருந்திருந்தால் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும். ஊழல் ஊறி போய் இருந்தும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழனின் உழைப்பு. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 30 ஆண்டுகள் அந்த பாதிப்பிலிருந்து தமிழகம் மீளாது. இவ்வாறு பேசினார்.