Skip to main content

எண்ணற்ற சவால்கள்... அசராத பூர்ண சுந்தரி... குவியும் பாராட்டுகள்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 2019 ஆம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி என்ற தம்பதியினரின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளான பூரணசுந்தரி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 

 

பூர்ண சுந்தரி 3 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்தார். இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்துள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் பி. ஏ (ஆங்கிலம்) பயின்று வந்துள்ளார். 

 

அப்போது தனது தந்தை பொருளாதார நெருக்கடியில் இருந்ததைச் சிந்தித்து தான் ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்குச் சேவையாற்றி பெற்றோர்களுக்கும் உதவ வேண்டும் என அதில்  கவனம் செலுத்தி படித்துவந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு, வங்கிப் போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார். போட்டி தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் கூட நிச்சயம் ஒருநாள் தேர்வில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு தேர்வுகளை எழுதிவந்தார்.

 

2018 ஆம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் 4ஆவது முறையாகக் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அதில் 296 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. 


தேர்வு வெற்றி குறித்து பேசிய பூர்ணசுந்தரி, தாம் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களைச் சந்தித்துள்ளேன். தேர்வுக்காக பிறரைப் படித்துக் காண்பிக்கச் சொல்லி அதனைக் கேட்டு மனனம் செய்து கற்றுக்கொண்டேன். போட்டி தேர்விற்காக தான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும், பொருளாதார உதவியும்தான் என்னை வெற்றியாளராக உருவாக்கியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp


4 முறை இந்தத் தேர்வை எழுதி தற்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது, குடியுரிமை ஆட்சிப் பணியில் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடைய செய்ய வேண்டும், அதன் மூலம் மன திருப்தி அடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.