Skip to main content

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
lawyer bhavani pa.mohan



கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை முடக்கிப் போட்டு விட்டது கரோனா வைரஸ் பரவலும் அதனால் ஆளும் அரசுகள் போட்டுள்ள ஊரடங்கும். இந்தநிலையில் மென்பொருள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை அவரவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறைக்கு கொண்டு வந்து அதை பழக்கப்படுத்திவிட்டது.
 


அவரவர் வீட்டில் இருந்தபடியே இணையம் வாயிலாக அலுவலக கூட்டங்களில் பங்கேற்பது என அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் கூட்டம் வரை நடக்கிறது. அதுபோல ஹாவார்டு, கேம்பிரிட்ஜ் என உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மக்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது என இணையம் வழி வாயிலாக இலவசமாகப் பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன. யூடியூப், ஜூம், கூகுள் மீட்டிங் என பல நூறு மென்பொருட்கள் இதற்கு உதவி செய்கின்றன.
 

 

இதன் தொடர்ச்சியாகத்தான் வழக்கறிஞர்களுக்கு சட்டப் பயிலரங்க வகுப்புகளை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். தமிழகத்தில் சுமார் 80,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக 90 சதவீதமான நீதிமன்றப் பணிகள் நடைபெறவில்லை. ஜாமீன் மனுக்கள் என அவசர வழக்குகள் மற்றும் சிறிதளவு நீதிமன்றத்தில் விசாரிக்க படுகின்றன. 
 

வருங்காலத்தில் வழக்கறிஞர்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இணையம் வாயிலாக பயிற்சி பெறத்தான் ப.பா.மோகன் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு எஸ் நாகமுத்து அவர்களின் வழிகாட்டுதலில்  வெபினர் எனப்படும் பயிலரங்குகளை தினமும் நடத்தி வருகின்றார். ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இன்றைய தேதி வரை சுமார் 37 தொகுப்புகள் இதில் நடந்துள்ளன. நாள்தோறும் ஐநூறு முதல் ஆயிரம் வழக்கறிஞர்கள் செயலி மூலமாக இதில் பங்கு பெற்று வருகின்றனர்.

 

nakkheeran app


 

இதில், சாட்சிய சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம், குடும்ப சட்டங்கள், இந்திய தண்டனை சட்டம் விசாரணை நடைமுறை சட்டங்கள், ஊடக சுதந்திரம், நக்கீரன் நடத்திய சட்டப் போராட்டம் என பல்வேறு தலைப்புகளில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் என் மனோகரன் சங்கரசுப்பு, கருணாநிதி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி, மூத்த வழக்கறிஞர்கள் கோயம்புத்தூர் கே ஆர் சங்கரன், சஞ்சயன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
 

வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த வகுப்புகளில் பங்கெடுக்கின்றனர். ஏராளமான சட்ட விளக்கங்கள், முன்னோடியான தீர்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சி வகுப்புகள் இளம் வழக்கறிஞர்களுக்கு என மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது என்கிறார்கள் இளம் வழக்கறிஞர்களான சுபாஷ் ப.பா.மோகன், கலையரசு உள்ளிட்டோர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு! 

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Online Booking for Jallikattu Tournaments

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும்.

இந்நிலையில் வரும் ஜனவரியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும்,  போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.