
சசிகலாவின் கடைசி தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் அடிக்கடி அதிரடி பேட்டிகளை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். ஜெ சிகிச்சை வீடியோ ஆதாரம் வெளியிடுவோம் என்று சொல்லி பரபரப்பை கிளப்பினார்.
இந்த நிலையில் தனக்கென ஒரு இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் செய்து வருகிறார். ’போஸ் மக்கள் பணி இயக்கம்’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கி தனது சுற்றுப்பயணத்தில் இளைஞர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சனிக்கிழமை காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயக்க பிரதிநிதிகளை சந்தித்த பிறகு மாலை புதுக்கோட்டையில் இயக்க பிரதிநிதிகளை சந்திக்க வந்தார். பட்டாசு சால்வை என்று வரவேற்று அதிகமாகவே இருந்தது.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, போஸ் மக்கள் பணி இயக்கம் என்பது சேவை இயக்கம் மட்டுமே. எந்த காலத்திலும் இந்த இயக்கம் அரசியல் இயக்கமாகாது. இந்த இயக்கம் கூட தினகரன் ஆதரவோடு அவரின் தலைமையில் இயங்கும் இயக்கம் தான். இந்த இயக்கம் தேர்தலை சந்திக்காது. நானும் தேர்தலை சந்திக்கமாட்டேன்.
அம்மா மருத்துவமனையில் இருந்த போது சின்னம்மா, மற்றும் டாக்டர் சிவக்குமார் போன்ற எங்க உறவினர்களில் டாக்டர்கள் 2, 3 பேர் மட்டும் தான் பார்த்தாங்க. முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றவர்கள் எல்லாம் வார்டு கதவு கண்ணாடிக்கு அந்தப் பக்கமே நின்று டாக்டர்களிடம் கேட்டுகிட்டு போயிடுவாங்க. அவங்க யாரும் பார்க்கல. விசாரணை ஆணையம் அமைக்கிறதுக்கு முன்னால வீடியோ ஆதாரம் வெளியிடுவேன்னு சொன்னேன். இப்ப விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. வீடியோக்களையும் சம்மந்தப்பட்டவர்களே ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு விசாரணைக்கு அழைப்பு இல்லை. அழைத்தால் ஆஜராவேன்.
துரோகத்தின் வலி என்ற கேள்விக்கு? நீண்ட யோசனைக்கு பிறகு , துரோகத்தின் வலி என்பது எங்களுக்கு இல்லை. யாராலும் எங்களுக்கு வலிக்க வைக்க முடியாது. அது அவர்களுக்கு தான் வலிக்கும். அந்த வலியை இனி உணர்வார்கள். முன்பு அவர்கள் செய்த தவறுகளுக்கு எங்களை கை காட்டிவிட்டு போனார்கள். ஆனால் இப்ப இல்லை. அதனால எங்களுக்கு விடுலையாகத் தான் இருக்கு.
போஸ் மக்கள் பணி இயக்கத்தின் எதிர்கால திட்டம் என்பது.. கிராமங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வது, அடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்துவது என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)