கர்நாடக தேர்தலில் வேறெந்த தேர்தலை விடவும் அதிகளவு பணம் செலவழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

money

செண்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற நிறுவனம், தேர்தல் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆராய்ச்சி நடத்திவருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலவழித்த மொத்த தொகை குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, நடந்துமுடிந்த தேர்தலுக்காக ரூ.9ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரத்து500 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்டதை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செலவில் பிரதமர் பிரச்சாரத்திற்கு ஆன செலவை சேர்க்கவில்லை எனவும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.

Advertisment

ஒருவேளை இந்த நிலை நீடித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை அரசியல் கட்சிகளால் செலவழிக்கப்படலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் ரூ.30 ஆயிரம் கோடி செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.