Minister Chakrapani himself accepts the tuition fee of students joining Dindigul Government College!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நான்கு கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு கல்லூரி கள்ளிமந்தயம் அருகே செயல்பட்டு வருகிறது. அதுபோல் மற்றொரு கல்லூரி ஒட்டன்சத்திரம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கி வருகிறது. இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அமைச்சரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான சக்கரபாணி சார்பாக செலுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அமைச்சர் சக்கரபாணி சார்பாக செலுத்தப்படும். எனவே மாணவ மாணவியர் முதல் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Advertisment

இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யாதவர்களும் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து கொள்வதற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் கல்வித்துறை இயக்குநரிடம் பேசி அனுமதி பெற்று வழங்கியுள்ளார். எனவே இணையதளத்தில் பதிவு செய்யாதவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரியில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.