Skip to main content

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

The High Court questions the ed in the case pursued by the TN govt

 

மணல் குவாரி தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “குவாரிகளில் மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் வராது. தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (27.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானர். அவர் வாதிடுகையில், “மாநில அரசின் வழக்குகளில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கூட்டாட்சி மீதான தாக்குதலாகும்.

 

கனிம வள வழக்குகளை மாநில அரசு விசாரணை நடத்தலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சம்மன் அனுப்புவதன் மூலம் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சங்கட்த்தை ஏற்படுத்துகிறது. யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சம்மன் அனுப்பு முடியாது. மாறாக உதவி செய்ய வருமாறு  கோரிக்கை அல்லது அழைப்பை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை விடுக்கலாம்.  மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இந்த வழக்கின் மூலம் மத்திய அரசின் அதிகார எல்லை தொடர்பான தீவிரமான கேள்வி எழுகிறது” வாதத்தை முன் வைத்தார்.

 

The High Court questions the ed in the case pursued by the TN govt

 

அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.  அவர், ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியாளர்களின் மனுவை எதிர்த்தோம். 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எனவே அதனை விசாரிக்க அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “குற்றத்தை கண்டுப்பிடித்துவிட்டீர்களா” கேள்வி எழுப்பினர்.  அதற்கு, “ மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தான் அமலாக்கட்துறை விசாரணை நடத்துகிறது” எனத் தெரிவித்தார்.

 

The High Court questions the ed in the case pursued by the TN govt

 

இதனையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை (28.11.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசின் திட்டத்தைப் பின்பற்றும் டெல்லி மற்றும் இமாச்சல் அரசுகள்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
govt of Delhi and Himachal are following the plan of the TN govt

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, புதிதாகக் கண்டறியப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இமாச்சலப்பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய மகளிருக்கு  மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 8 லட்சம் பெண்கள் பயன்பெற உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘5 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு’ - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Attention 5th class students Minister Anbil Mahesh important information

வரும் (2024 - 2025) ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, அரசின் நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாவண்ணம் அவர்களுக்கான உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் "நேரடி பயனாளர் பரிவரித்தனை" (DBT) முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியினை எளிமைப்படுத்தும் விதத்தில் 2024-2025 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அத்தருணத்திலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித் தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் போதும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ். இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர்.

அதே சமயம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைத்திடும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கும்போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எமிஸ் (EMIS) தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நல்வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.