
இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றழைக்கப்பட்ட திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் (69 வயது) காலமானார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.
'அலைகள் ஓய்வதில்லை', 'மண்வாசனை', 'முதல் மரியாதை' என பாரதிராஜாவின் பல படங்களில் பணியற்றியுள்ளார். பாரதிராஜாவின் பல திரைப்படங்களில் தமது கலைவண்ணத்தைக் காட்டியவர் கண்ணன்.
மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனாவார். அதேபோல் மறைந்த கண்ணனின் சகோதரரான எடிட்டர் பி.லெனினும் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.