/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thangamani.jpg)
அதிமுக ஆட்சியை திமுக உள்ளிட்ட மற்றவர்கள் குறை சொன்னால் பரவாயில்லை, அன்னியச் செலாவணி முறைகேடு குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற டிடிவி தினகரனுக்கு அந்தத் தகுதி இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி,
அந்த 18 பேரில் ஒருவரை நான் முதலமைச்சராக ஆக்குவேன் என்று சொல்லிவிட்டு, அதில் இரண்டு பேருக்கு தற்போது நாக்கில் தேனை தடவியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பனும், செந்தில் பாலாஜியும் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், ஊரில் பிள்ளை பிடிப்பவன் வந்தால் குழுந்தையெல்லாம் தூக்கிட்டு உள்ளே போவார்கள். அதேபோல் தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இவர்களை பார்த்தால் அவர்களது வீட்டிற்குள் போய் வீட்டை பூட்டுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ளவே முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்று டிடிவி தினகரன் நாடகமாடுகிறார். அதிமுக ஆட்சியை திமுக உள்ளிட்ட மற்றவர்கள் குறை சொன்னால் பரவாயில்லை, அன்னியச் செலாவணி முறைகேடு குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற டிடிவி தினகரனுக்கு அந்தத் தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)