ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில்தற்பொழுது அவருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாகவிக்டோரியா மருத்துவமனைவெளியிட்டிருந்தஅறிக்கையில், "சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்குத் தற்போது சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனில் நுரையீரல் தொற்று இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவுக்கு கரோனா இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.சி.டி.ஸ்கேனைஅடுத்துசெய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.