Skip to main content

தொடரும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Continued rain; Holiday notification for schools

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அதே சமயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். உள்ளூரில் பெய்து வரும் மழை நிலவரத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம். மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டிமன்ற பெண் பேச்சாளரிடம் ஆபாச சைகை; ஓடும் ரயிலில் சிக்கிய போதை ஆசாமி 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ஓடும் ரயிலில் தனியாக இருந்த பட்டிமன்ற பேச்சாளர் பெண்ணிடம் போதை ஆசாமி ஒருவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லக்கூடிய ரயிலில் பட்டிமன்ற பெண் பேச்சாளரான யோகதர்ஷினி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலில் அதிகம் கூட்டமில்லாத நிலையில் அவர் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த போதை ஆசாமி ஒருவர் ஆபாச சைகையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்து கொண்ட யோகதர்ஷினி உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகளிடம் நடந்தவற்றை தெரிவித்தார். அதன் பிறகு அதிகாரிகள் மற்றும் சக பயணிகள் அவரை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பெண் பட்டிமன்ற பேச்சாளர் யோகதர்ஷினி, 'ரயிலில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பெண்கள் துணிச்சலோடு புகார் செய்ய வேண்டும்' என்ற கருத்தை வைத்துள்ளார்.

Next Story

விநாயகர் சதுர்த்தியில் ஏற்பட்ட முன்பகை; 6 மாதத்திற்குப் பின் நிகழ்ந்த படுகொலை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Enemy on Ganesha Chaturthi; Tragedy happened after 6 months

புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் சிவானந்தம் என்ற இளைஞர் நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், மகேந்திரன், ரஞ்சித், கார்த்திக் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சிவானந்தத்தை படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

Enemy on Ganesha Chaturthi; Tragedy happened after 6 months

கொலை நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், கொலையில் சம்பந்தப்பட்ட ரஞ்சித், மகேந்திரன், ஆகாஷ், கார்த்திக் ஆகிய நான்கு இளைஞர்களும் சரணடைந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.