பொள்ளாச்சி பாலியல்வழக்கில் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவை பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் உட்பட 270க்கும் மேற்பட்ட பெண்களை முகப்புத்தகம் மூலம் காதல் வலைவீசி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் வசந்த் குமார், சதீஷ், சபரீசன், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் வரும் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகசிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை பார்நாகராஜ் தாக்கியது தொடர்பான வழக்கில் பார்நாகராஜ் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.