Skip to main content

காவிரி உரிமை மீட்பு பயணம் - முக்கொம்பில் துவக்கி வைத்த ஸ்டாலின்!( படங்கள்)

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
caverin perani1

 

தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

  

நேற்று முன்தினம் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  

perani2

 

காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக மேற்கொள்ள இருக்கிறது. இன்று திருச்சி முக்கொம்பிலும், வருகிற 9-ந் தேதி அரியலூரிலும் இந்த பயணம் தொடங்கும்.  அதன்படி காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று  பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியது.  அதனை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

  தொடக்க நிகழ்ச்சியாக முக்கொம்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.

perani 3perani 4

 

இந்த நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வை சேர்ந்த 89 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றார்கள். அவர்களுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

 

ஜீயபுரம், கம்பரசம்பேட்டை, கலைஞர் அறிவாலயம், சிந்தாமணி அண்ணாசிலை, இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, மெயின் கார்டுகேட், காந்திமார்க்கெட், தஞ்சை ரோடு வழியாக பால்பண்ணை பைபாஸ்ரோட்டில் இருந்து சர்க்கார்பாளையம், முல்லைக்கொடி, வேங்கூர் வழியாக கல்லணை சென்றடைந்தனர்.

 

தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுகிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்துக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வழியில் அகண்ட காவிரி ஆறு தற்போது வறண்டு கிடப்பதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக பயணித்த இந்த குழு, 12-ந்தேதி கடலூரில் பயணத்தை நிறைவு செய்கிறது.

 

perani

 

திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை 168 கி.மீ. தூரத்துக்கு இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த தூரத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 நாட்களில் நடக்க உள்ளனர். இதற்கிடையே 9-ந்தேதி அரியலூரில் இருந்து காவிரி மீட்பு பயணத்தை தொடங்கும் மற்றொரு குழுவினரும் 12-ந்தேதி கடலூர் சென்றடைகின்றனர்.  அங்கு மறுநாள் 13-ந்தேதி காலை பொதுக்கூட்டம் நடக்கிறது. 

 

இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் புறப்படும் தலைவர்கள் சென்னை கவர்னர் மாளிகைக்கு சென்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கவர்னரிடம் மனு அளிக்கின்றனர்.


காவிரி உரிமை மீட்பு பயணத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.

 

 முன்னதாக தி.மு.க. தலைவர் கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்த விபரங்களை மு.க.ஸ்டாலின் கலைஞரிடம் விளக்கி கூறினார்.


 

   

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலையேறச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
A youth who went to Velliangiri mountain was lose their live

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற இளைஞர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளனர். அப்பொழுது அதிகாலை ஐந்து மணிக்கு ஆறாவது மலையை அடைந்து நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பனிப்பொழிவு ஏற்பட்டது. திடீரென தமிழ்ச்செல்வன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வெள்ளியங்கிரி மலை ஏற சென்ற இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.