Skip to main content

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் அதிரடி மாற்றம்!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

tamil nadu assembly

 

தமிழக காவல் துறையின் உயரதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்து வருகிறது எடப்பாடி அரசு. அந்த வகையில் இன்று (12.08.2020) ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.! 

 

இந்த இடமாற்றத்தில், சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான  சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன் உள்ளிட்ட 9  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன், சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாகவும், சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி. சிபிசக்ரவத்தி, சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பியாகவும், சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பி. ஜெயலட்சுமி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாக உள்ள ஜெயச்சந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாகவும், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி. யாக இருந்த சி.ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாகவும்  மாற்றப்பட்டுள்ளனர். 

 

மேலும், சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த கண்ணம்மாள், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராகவும், அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா, சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆகவும்  மாற்றப்பட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Transfer of 48 IAS Officers

அண்மையாகவே தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 16 ஐபிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஐஜி ஆர்.தமிழ் சந்திரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி.ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லஷ்மி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமுண்டீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆணையராக பாண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் எஸ்.பியாக மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தீவிரவாத தடுப்புப்பிரிவு எஸ்பியாக புக்யா சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தென்மண்டல குடிமைப் பொருள் வழங்கல் துறை எஸ்பியாக ஆர்.ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையகம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; ஐபிஎஸ் அதிகாரிகள் சார்பில் நிவாரண நிதி வழங்க முடிவு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Mikjam storm damage Decision to provide relief funds on behalf of IPS officers

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.