School Dance

பள்ளி மாணவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பிவிட்டு, பள்ளி வளாகத்தில் நடன நிகழ்ச்சி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேசம் மாநிலம் திகம்கார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சி ஒன்றினை பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் நடத்தியுள்ளார். பள்ளி வளாகத்தில் அன்றைய தினம் தேர்வு நடைபெற்றதால், மாணவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பிவிட்டு கீழே நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்தக் கலை நிகழ்ச்சியில் வாலிபால் போட்டியும், கவர்ச்சி நடனமும் இடம்பெற்றிருந்தது. இதனால் ஏற்பட்ட இரைச்சலிலும் மாணவர்கள் தேர்வெழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விழாவில் திகம்கார் மாவட்ட ஆட்சியர் அபிஜித் அகர்வாலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.